ஜனநாயகத்திற்கு விரோதமாகவே பல சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.
கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று காலை ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. அத்துடன் ஜனநாயகத்திற்கு விரோதமான பல சம்பவங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

