Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்றில் தோல்வியடைந்தால் மீண்டும் உயர் நீதிமன்றம் செல்ல இணக்கம்

November 17, 2018
in News, Politics, World
0

புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தீர்த்துக்கொள்ளும் இறுதி முயற்சியும் தோல்வியடைந்தால், மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக 2 மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

முதலாவது பிரதமரின் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது குறித்து ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை பெற வேண்டும்.

இரண்டாவது பாதிக்கப்பட்ட தரப்பின் ஊடாக வழக்கு தாக்கல் செய்வது.

உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்த பின்னரே பிரதமர் நியமனம் தொடர்பான வழக்கு தொடரப்படும் எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உத்தியோகபூர்வமற்ற வகையில் இனங்கியுள்ளதாக தெரியவருகிறது.

பிரதமர் பதவியில் மாற்றம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால், தமது விருப்பத்திற்கு அமையவே புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி அண்மையில் பல முறை கூறியிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத பட்சத்திலும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றுக்கு 113 பெரும்பாண்மை இல்லை என்ற சந்தர்ப்பத்தில், பிரதமரை நியமிக்க வேண்டிய விதம் பற்றி உயர் நீதிமன்றத்தின் விளக்கம் கோரப்படும் என தெரியவருகிறது.

Previous Post

மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கெடு கொடுத்த மைத்திரி

Next Post

ரணிலை சந்திக்க மறுத்த சிறீதரன் கிளிநொச்சி பயணம்!

Next Post

ரணிலை சந்திக்க மறுத்த சிறீதரன் கிளிநொச்சி பயணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures