சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்துள்ள படம் கனா. தனது நண்பரும், நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் பெண்ணின் கதை இது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகயிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் படம் தணிக்கைக்கு அனுப்பட்டது, படத்தை பார்த்த அதிகாரிகள் அனைவரும் பார்க்கும் வகையிலான யு சான்றை அளித்துள்ளனர்.

