Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரன்வீர் – தீபிகா திருமணத்தில் தமிழகத்தின் மைசூர்பா!

November 17, 2018
in Cinema
0

இந்திய திரையுலகமே, ஆவலோடு காத்திருந்த பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமணம், நவ., 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில், மிக பிரமாண்டமாக நடந்தது.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த உச்ச நட்சத்திரங்கள், சில நாட்களுக்கு முன், திருமணச் செய்தியை ‘டுவிட்டரில்’ ஒரே நேரத்தில் அறிவித்ததும், ‘ராயல் வெட்டிங்’ ஆக தேசமே பேசியது; சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் இதுவே ‘வைரல்’ ஆனது.

இந்நிலையில், சக நட்சத்திரங்கள், நண்பர்களுக்கு புதுமண தம்பதிகளிடமிருந்து தனிப்பட்ட கடிதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இனிப்புப் பெட்டகமும் அனுப்பப்பட்டுள்ளது.

அழகான வடிவமைப்பிலான கடிதத்துடன், இன்ப அதிர்ச்சியாக மைசூர்பா பெட்டகமும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியை பல பிரபலஸ்தர்கள் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

அதில், ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா’வின் சுவையையும் புகழ்ந்துள்ளனர்.

‘ரன்வீரும் தீபிகாவும் இந்த மைசூர்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும்; தீபிகா ரன்வீரின் அன்பளிப்புக்கு நன்றி’ என்றும், ‘அவர்களது திருமணப் புகைப்படங்களை விட, உடன் வந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாதான் இப்போது வேண்டும்’ என்றும், ‘மைசூர்பாவில் காணாமல் போன ‘க்’ பற்றிய எங்களது விளக்கம், அது மைசூர் பாக் என்று சொல்வதற்கு முன்னரே நாவில் கரைந்து மறைந்து விட்டது’ என்றும் முக்கியஸ்தர்கள் கூறியுள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ நிறுவனர் கிருஷ்ணனை தொடர்பு கொண்டபோது, ”ஒரு முக்கியமான பிரபலத்துக்கு மைசூர்பா மொத்தமாக தேவை என, எங்களது பெங்களூரூ கிளையை தொடர்பு கொண்டு வாங்கினர். அப்போது, தீபிகா படுகோனே — ரன்வீர் தம்பதிகளின் திருமண கொண்டாட்டத்திற்குத்தான் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. திரை நட்சத்திரங்களும், முக்கியஸ்தர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புப் பெட்டகத்தையும், கடிதத்தையும் பகிர்ந்து வைரலான பிறகுதான், தெரிந்துகொண்டோம். அன்பைச் சொல்ல அழகான வழியைத் தேர்ந்தெடுத்த புதுமணத்தம்பதிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். எங்கள் மைசூர்பாவுடனான இனிய தருணங்களைப் பகிர்ந்த, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் அன்பும்,” என தெரிவித்தார்.

-நமது நிருபர்-

Previous Post

மிஷ்கினை 56 முறை கன்னத்தில் அறைந்தார்: சூப்பர் டீலக்ஸ் படத்திலிருந்து நதியாக விலகியது ஏன்? புதிய தகவல்கள்

Next Post

பிரஷாந்த்தின் ஜானி டிரைலர் வெளியீடு

Next Post

பிரஷாந்த்தின் ஜானி டிரைலர் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures