எந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

