Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரியின் செயற்பாட்டால் இலங்கைக்கு கிட்டிய நன்மை பறிபோகுமா?

November 13, 2018
in News, Politics, World
0
மைத்திரியின் செயற்பாட்டால் இலங்கைக்கு கிட்டிய நன்மை பறிபோகுமா?

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கு மீள வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளது.

குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்தவை அதிரடியாக பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்திற்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி தீர்வு காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையுடான கோரிக்கையை விடுத்திருந்தது.

எனினும் இவற்றை முழுமையாக உதாசீனம் செய்த நிலையில் சிறிலங்கா அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்ததுடன், பொதுத் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், ஜி.எஸ்.பி வரிச் சலுகையை மீளப் பெறுவதற்கு காரணமாக அமைந்த முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்ள்ளமை, மற்றும ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை நிராகரித்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளமை ஆகிய சம்பவங்களுக்கு மத்தியிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு கொழும்பிற்கு விஜயம் செய்யவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடமேறிய பின்னர் ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

ஏழு வருடங்களுக்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்டதுடன், இதன்மூலம் ஆடை ஏற்றுமதிச் சந்தைக்கு பாரிய நன்மை கிட்டியிருந்தது.

இந்த சலுகையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல்பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச சாசனங்களை செயற்றிறன்மிக்க வகையில் அமுல்படுத்தி, அவற்றை நிலை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா உறுதி வழங்கியிருந்தது. ஜி.எஸ்.பி வரிச் சலுகையை பெறும் அனைத்து நாடுகளினதும் அரசாங்கங்களுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி, வரிச் சலுகைக்கான அடிப்படைகளை உறுதி செய்வதாக ஐரோப்பிய ஆணைக்குழு கூறியுள்ளது.

இதன்பொருட்டு அந்தந்த நாடுகளுக்கு வழக்கான விஜயங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஜி.எஸ்.பி வரிச் சலுகையை பெறுவதற்கான நிபந்தனைகளின் மீளாய்வு அடங்கிய அறிக்கை இறுதியாக கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான நிபந்தனை மீளாய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

Previous Post

இன்று வரவுள்ளது வரவாற்று தீர்ப்பு? 10 மணிக்கு விசாரணை ஆரம்பம்!

Next Post

ஜனநாயக விரோதிகளை தோற்கடிக்க புதிய கூட்டணி!

Next Post

ஜனநாயக விரோதிகளை தோற்கடிக்க புதிய கூட்டணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு

July 18, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை

July 18, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

July 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures