Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சமரசம் வேண்டாம், கதையை திருப்பி கொடுங்க : கதாசிரியர் பிடிவாதம்

November 11, 2018
in Cinema
0
சமரசம் வேண்டாம், கதையை திருப்பி கொடுங்க : கதாசிரியர் பிடிவாதம்

மலையாள இயக்குனரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய ‘ரண்டமூழம்’ என்கிற நாவலை மையமாக வைத்து மோகன்லால் நடிப்பில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், மகாபாரத கதையை படமாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது ‘மோகன்லாலை வைத்து ஒடியன்’ படத்தை இயக்கிவரும் ஸ்ரீகுமார் மேனன், தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். துபாயில் இருக்கும் தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி தான் இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்திற்காக தான் போட்டிருந்த ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதாகவும், இந்த குறிப்பிட்ட காலத்தில் இந்த கதையை படமாக்க தவறியதால் படத்தின் ஸ்கிரிப்ட்டை தன்னிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என எம்.டி.வாசுதேவன் நாயர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்த விசாரணை நேற்று நடைபெற்றது. இந்தப்பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட ஒரு மீடியேட்டரை நியமிக்கும்படி ஸ்ரீகுமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு உடன்பட எம்.டி.வாசுதேவன் நாயர், மறுத்துவிட்டதுடன் தன்னுடைய ஸ்க்ரிப்ட்டை திருப்பித்தர வேண்டும் என்பதில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார்.

அதனால், இந்த வழக்கும் வரும் நவ-13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோடிகளில் கதைக்கான உரிமை தொகை கிடைக்கும் நிலை இருந்தாலும் எம்.டி.வாசுதேவன் நாயர் அதை வேண்டாமென ஒதுக்குவது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

Previous Post

ஜீரோ’ வாங்கிய 10 கோடி

Next Post

பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்ற ஸ்ரீ ல.சு.க. எம்.பி.க்கள்

Next Post
பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்ற ஸ்ரீ ல.சு.க. எம்.பி.க்கள்

பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்ற ஸ்ரீ ல.சு.க. எம்.பி.க்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures