அமெரிக்க இடைத் தவணைத் தேர்தல் நாளன்று (நவம்பர் 6) எல் சல்வடோரைச் (El Salvador) சேர்ந்த 106 வயது மூதாட்டி அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.
மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்காவில் குடியேறிகளாக நுழைவது தொடர்பான பிரச்சினை, இன்றைய தேர்தலில் முக்கிய இடம்பிடித்தது.
இந்தச் சூழலில், திருவாட்டி மரியா வேல்ஸ் பொனில்லியா (Maria Valles Bonilla) அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.
பேரக் குழந்தைகள் புடைசூழ, திருவாட்டி பொனில்லியா குடியுரிமை ஏற்புச் சடங்கில் மகிழ்ச்சியாகக் கலந்துகொண்டார்.
மறைந்த தமது கணவருக்கு, அமெரிக்கக் குடியுரிமை பெறுவது நெடுநாள் கனவு என்று குறிப்பிட்ட பாட்டி, தாம் அதைப் பூர்த்தி செய்துவிட்டதாகக் கூறி மகிழ்கிறார்.

