மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும் முடிவை நேற்று அறிவித்தது.
இது தொடர்பான அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில் தயாரிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக நடந்த கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டது.
ஏற்கனவே ஆராயப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறிக்கை நேற்றைய கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. இதன்போது மிகக் காரசாரமானதாக அறிக்கை இருந்தது. கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், காரத்தை குறைத்துள்ளார்.
இரண்டு தலைவர்களையும் (ரணில், மகிந்த) நேரடியாக பகைக்கக் கூடாது என்று குறிப்பிட்டே, அறிக்கையை மென்வலுவாக்கியுள்ளார். இதனை கூட்டத்தில் இருந்த ஏனையோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

