நெகிழ்வுத் தன்மை கொண்ட தேசிய அரசாங்கமொன்றை உருவாக்க மீண்டும் ஒன்றுபடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
காணப்பட்ட குறைபாடுகளை சரிசெய்து கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கிடைத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இலகுவாக ஆட்சியமைக்கும் பலம் காணப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள கடும்போக்கு அரசியல்வாதிகளுக்கு த.தே.கூட்டமைப்பின் இணைவு கசப்பானதாகவே காணப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்ள வழியமைக்காமல் பெரும்பான்மை சமூகத்தின் கட்சிகள் அரசாங்கம் அமைக்க ஒத்துழைப்பு வழங்க முன்வாருங்கள் என்பதே இத்தகையவர்களது அழைப்பாகவுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.