Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ராஜபக்ச அமைச்சரவை இன்று பதவியேற்குமா?

October 29, 2018
in News, Politics, World
0

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவை அங்கீகரிக்க சபாநாயகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார். இதனால், அங்கு உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, புதிய பிரதமராக ராஜபக்சேவின் அமைச்சரவை இன்று பதவியேற்கும் என்று கருதப்படுவதால், முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைந்து ஆட்சி செய்தன. சமீப காலமாக சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணிலுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டணியை கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென முறித்துக் கொண்ட சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணிலையும் அதிரடியாக நீக்கினார்.

மேலும்,  ‘இலங்கை மக்கள் முன்னணி’யுடன் கூட்டணி வைத்த சிறிசேனா, அக்கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக நியமித்து பதவி பிரமாணமும் செய்து வைத்தார். இதனால், இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அடுத்த மாதம் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட இருந்தது. அதற்குள் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பில்லை என்பதால், நாடாளுமன்றத்தை 16ம் தேதி வரை முடக்கவும் உத்தரவிட்டார்.

இது மட்டுமின்றி பிரதமர் அலுவலக குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதோடு, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பும், அலுவலக கார்களையும்  நேற்று முன்தினம் சிறிசேனா திரும்ப பெற்றார்.

சிறிசேனா தன்னை நீக்கியதை ஏற்க மறுத்துள்ள ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக பதற்றம் நிலவுகிறது. இதனால், அனைத்து காவல்துறை அதிகாரிகளும் விடுமுறையை ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்பும்படி உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரணிலை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேனா நீக்கி இருப்பதை ஏற்க நாடாளுமன்ற சபாநாயகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சிறிசேனாவுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘இலங்கையின் சட்டப்படியான பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தான் என்பதை நான் அங்கீகரிக்கிறேன். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள ஒருவரைதான் பிரதமராக ஏற்க முடியும். எந்த அடிப்படையில் நவம்பர் 16ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளீர்கள்?

நாடாளுமன்றத்தை முடக்குவது, நீடிப்பது பற்றி சபாநாயகருடன் ஆலோசித்த பிறகுதான் அதிபர் முடிவு எடுக்க முடியும். எனவே, நாடாளுமன்ற முடக்கம் குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, கொழும்புவில் உள்ள பிரசித்தி பெற்ற புத்தர் கோயிலுக்கு ராஜபக்சே நேற்று சென்று வழிபாடு நடத்தினார்.

அவர் இன்று தனது அமைச்சரவையை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிரதமராக பதவியேற்றதில் இருந்து இதுவரையில் அவர் எந்த அறிக்கை, பேட்டியையும் கொடுக்கவில்லை. அதேபோல், பெரும்பான்மையை பெறுவதற்கு ராஜபக்சேவும், ரணிலு–்ம் தமிழ் கட்சிகளின் கூட்டணி ஆதரவை பெற முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு 16 எம்பிக்கள் உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், இவர்களின் ஆதரவு பெற்றவர்கள் மட்டுமே பெரும்பான்மை நிரூபித்து பிரதமராக முடியும். இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையை இந்தியா கவனித்து வருகிறது.

இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், “இலங்கையில் நடந்து வரும் அரசியல் மாற்றங்களை  உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்றார்.யாருக்கு பெரும்பான்மை?இலங்கை நாடாளுமன்றத்தின் எம்பி.க்கள் எண்ணிக்கை 225. இதில், ஆட்சி அமைக்க 113 எம்பி.க்களின் ஆதரவு தேவை.

தற்போது சிறிசேனா, ராஜபக்சே கூட்டணிக்கு 99 எம்பி.க்கள் உள்ளனர். எனவே, ராஜபக்சே பெரும்பான்மை நியமிக்க 14 எம்பி.க்களின் ஆதரவு தேவை. ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 105 எம்பி.க்கள் உள்ளனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 8 எம்பி.க்கள் மட்டுமே தேவை.குவிந்த தொண்டர்கள்கொழும்புவில் உள்ள டெம்பிள் ட்ரீஸ் பகுதியில்  ரணில் விக்ரமசிங்கேவின் அலுவலக குடியிருப்பு உள்ளது. இதன் முன்பாக நேற்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். இதனால், பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சீன தூதர் சந்திப்புஇலங்கைக்கான சீன தூதர் செங் சியூவான், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவையும், புதிதாக பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவையும் நேற்று அடுத்தடுத்து சந்தித்து பேசினார்.

ரணிலின் பதவி பறிப்பு மற்றும் ராஜபக்சேவின் நியமனத்துக்கு பின்னணியில் சீனா இருப்பதாக கருதப்படும் நிலையில், அந்நாட்டு தூதர் 2 பேரையும் சந்தித்து பேசியது சந்தேகம் வலுத்துள்ளது. அதிபர் குற்றச்சாட்டுரணில்  பதவி நீக்கத்துக்குப் பிறகு நேற்று முதல் முறையாக பேசிய அதிபர்  சிறிசேனா, “எங்கள் இருவருக்கும் இடையே கொள்கை ஒப்பந்தத்தில் மிகப்பெரிய  இடைவெளி இருந்தது. அரசு நிர்வாகத்தில் கூட்டாக முடிவு எடுப்பதை ரணில்  தவிர்த்தார்.

தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கும் நடவடிக்கையால்தான்  அவர் நீக்கப்பட்டார். நாட்டில் ஊழல் அதிகரித்தது.  நல்லாட்சி என்பதை அவர் முழுமையாக அழித்துவிட்டார். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள  கலாசாரம், கொள்கை வேறுபாடுதான் நாட்டின் அரசியல், பொருளாதார  நெருக்கடிக்கு காரணம் என நம்புகிறேன்” என்றார்.

பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடுஇலங்கை பெட்ரோலிய  துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா. நேற்று அவர், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்  நிறுவனத்தை பார்வையிட சென்றார். அப்போது, ராஜபக்சேவின் ஆதரவாளர்கள்  சிலர் அவரை அந்த அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றனர்.

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால், அமைச்சரின் பாதுகாவலர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு  நடத்தினர். இதில், மூன்று பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அர்ஜூனா ரணதுங்கா ரணிலின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மாலியில் அமைதி படை மீது தாக்குதல்

Next Post

ரேப் காட்சிக்காக நடிகையிடம் எழுதி வாங்கிய பாலிவுட் நடிகர்

Next Post

ரேப் காட்சிக்காக நடிகையிடம் எழுதி வாங்கிய பாலிவுட் நடிகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures