நேற்று முன்தினம் சனிக்கிழமை, மாடியில் இருந்து தவறி விழ இருந்த குழந்தையை இரு காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
இச்சம்பவம் Savigny-sur-Orge (Essonne) இல் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் வசிக்கும் குழந்தை ஒன்று, வீட்டின் ஜன்னலுக்கால் வெளியேறி, பல்கனி பகுதிக்கு வந்துள்ளது. பின்னர் அங்கிருந்த கதிரை ஒன்றில் ஏறி அங்கிருந்து வெளியே விழ முற்பட்டுள்ளது. வீதியில் சென்ற நபர்கள் இச்சம்பவத்தை பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு அழைப்பு எடுத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கட்டிடத்தின் முதலாவது தளத்துக்கு படிக்கட்டு மூலம் ஏறி, அங்கிருந்து வெளிப்புறமாக இரண்டாம் தள பல்கனியில் ஏறி, குழந்தையை காப்பாற்றியுள்ளனர். குழந்தையின் தந்தை இரவு நேர வேலைக்குச் சென்று வந்து, வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும், ஜன்னலை மூடுவதற்கு மறந்துள்ளதாகவும், குழந்தையின் தாயார் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.