Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மக்கள் ஆணையுடனேயே ஆட்சி மாற்றம் 2020 வரை நல்லாட்சி அரசு தொடரும்

October 15, 2018
in News, Politics, World
0

2020ஆம் ஆண்டு வரை அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என்பதால் இடைக்கால அரசு பற்றிக் கூறப்படும் கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

யாரை அரசாங்கத்தில் அமர்த்துவது என்பது மக்களின் வாக்குரிமையின் ஊடாகவே தீர்மானிக்கப்பட வேண்டும். சூழ்ச்சிகள் மூலமாக அரசாங்கத்தை எவராலும் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் கூறினார். மொனராகலை மல்லகம பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அன்னாசி செய்கை அபிவிருத்தி வலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

தற்போது எல்லோரும் இடைக்கால அரசு பற்றிப் பேசுகிறார்கள். அப்படியொன்றைப் பற்றி எமக்குத் தெரியாது. இடைக்காலஅரசு பற்றிப் பேசியவர்கள யார் என்பதும் எமக்குத் தெரியாது. இருப்பினும் இடைக்கால அரசு என்பது அப்பட்டமான பொய். இதைப்பற்றி நாங்கள் பேசியதுமில்லை.

2020 ஆம் ஆண்டுவரை இந்த அரசாங்கமே தொடர்ந்துமிருக்கும். அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தலொன்று வரப்போகிறது. தற்போதைய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் வரப்போகும் பொதுத் தேர்தல் வரை பதவியிலிருப்பது உறுதி. எனவே நாங்கள் இடைக்கால அரசு என்ற விடயம் முற்றிலும் பொய்யானதென்பதை தெளிவாகக் கூறவிரும்புகிறோம்.
சிலருக்கு பல்வேறுபட்ட எண்ணங்கள் இருக்கலாம். அதைப்பற்றி அவர்கள் கதைப்பதற்கு சுதந்திரமும் இருக்கிறது. என்றாலும் 2020 ஆம் ஆண்டுவரை புதிய அரசொன்றை உருவாக்குவதற்கான தேர்தலொன்று நடைபெறப் போவதில்லை. ஒரு அரசாங்கத்தை பதவியில் அமர்த்துவதற்கு பொதுமக்களின் வாக்குரிமையின் ஊடாகத்தான் செய்யவேண்டுமே தவிர சூழ்ச்சிகளின் மூலமாகவல்ல. எவர்வேண்டுமானாலும் விரும்பினால் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். இந்த அரசுடன் இந்த ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்க முடியும். எனினும் இடைக்கால அரசு என்பது ஒருபோதும் நடைபெறமாட்டாது என்றார்.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு எமது நாட்டில் உருவாக்கப்படுகின்ற அன்னாசி செய்கை அபிவிருத்தி வலையம் நேற்று முன்தினம் மொனராகலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாய அமைச்சின் விவசாய ஆராய்ச்சி திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் அன்னாசி செய்கை வலயம் ஒவ்வொரு அரை ஏக்கர் பரப்பில் 75 பிரிவுகளாக நடப்பட்டுள்ளது. இதில் 75 விவசாயிகள் அன்னாசி செய்கையில் ஈடுபட்டுள்ளனர். விவசாய உபகரணங்கள் உட்பட விவசாய தொழில்நுட்ப அறிவுகளும் இவர்களுக்கு வழங்கப்படும். அதேநேரம் சந்தை வாய்ப்புகளும் அமைச்சினூடாக பெற்றுக்கொடுக்கப்படும்.

எமது நாட்டில் டொலரின் பெறுமதி அதிகரிப்பதுடன் ரூபாவின் மதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கு முடிந்தவரை ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு செயற்படவேண்டும். ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு உற்பத்தித் துறையை நாட்டுக்குள் மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. இதனைவிடுத்து அரசுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ குறைகூறிக்கொண்டிருப்பதில் எந்தவித பலனுமில்லை என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, எமது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டுமானால் வெளிநாட்டு சந்தையை இலக்காகக்கொண்டு உற்பத்திகளை ஆரம்பிக்க வேண்டும். இதனாலேயே நாம் விவசாய அமைச்சு என்ற வகையில் தற்போது ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

Previous Post

1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் அரசுடன் பேச தமிழ் முற்போக்கு கூட்டணி தயார்

Next Post

வாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்

Next Post

வாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures