பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்த அடுத்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு இடம்பாடுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக் காலமாக பாரிய விமர்ஷனங்கள் எழுந்துள்ளமை காரணமாக அவர் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபருக்கு இதற்கு முன்னர் ஜனாதிபதியும் இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தற்போதை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்யுமிடத்து, அந்த பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எஸ்.எம். விக்ரமசிங்க அல்லது சந்தன விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.