சென்னை போயஸ் தோட்டத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸ் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஓட்டல் உரிமையாளர் கிரண் ராவின் வீட்டில் சிலைப் பதுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். கிரண் ராவ் வீட்டில் மண்ணில் மறைக்கப்பட்ட கோயில் சிலைகள், தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணில் தோண்ட தோண்ட சிலைகள் கிடைப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் ரன்வீர்ஷா வீடுகளில் இருந்தும் பல சிலைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

