வடக்கு மாகாணத்தின் நடப்பு ஆண்டு செயற்பாடுகளுக்குப் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் முழுமையாகக் கிடைக்க வில்லை என்று மாகாணத் திறைசேரி தெரிவித்தது.
வடக்கு மாகாணத்தில் திணைக்களங்கள், அமைச் சுக்கள், அலுவலகங்கள் ஊடாக மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்களுக்காக 3 ஆயிரத்து 630 மில்லியன் ரூபா நிதி பாதீட்டில் ஒதுக்கப்பட்டது.
பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியாக 551 மில்லியன் ரூபாவும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியாக 3 ஆயிரத்து 81 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு முடிவதற்கு சுமார் இரு மாதங்களே உள்ள நிலையில் அந்த நிதி முழுமையாக மாகாணத்துக்கு விடுவிக்கப்பட வில்லை.
பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் 250 மில்லியன் ரூபாவும், மாகாணக் குறித் தொதுக்க்பபட்ட நிதியில் ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவுமே விடுவிக்கப்பட் டுள்ளது.
மீதமுள்ள 2 ஆயிரத்து 180 மில்லியன் ரூபா நிதி இன்னமும் கிடைக்கவில்லை என்று மாகாணத் திறைசேரி தெரிவித்தது.