வவுனியாவில் இராணுவ முகாம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈரட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வூவய என்னும் இடத்திலுள்ள இராணுவ முகாமில் மின்சாரம் தடைப்பட்டது. அதனை சீர் செய்வதற்காக சென்ற போது மின்சார கசிவு ஏற்ப்பட்டு மின்சாரம் தாக்கியதில் மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்னர் அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் முன்னரே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் கண்டி வத்தேகம பகுதியை சேர்ந்த சந்தறூவன் வயது 22 என்ற இராணுவ வீரரே மரணமடைந்தவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஈரட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

