வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் சாரல் மழை பெய்தது. இரவு 11 மணியளவில் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பலத்த மழை பெய்தது. ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. நந்தி மண்டபத்தின் வழியாக வழிந்தோடிய நீர், இரவு முழுவதும் முதல் பிரகாரத்தில் 10 செமீ உயரத்திற்கு தேங்கி நின்றது. மழை பெய்ய துவங்கிய சிறிது நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. இரவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் நேற்று காலை 8 மணிக்கு தான் வந்தது.

