திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

