நேற்று வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பா-து-கலேயின் Audinghen பகுதி கடலில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட அகதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். சிறிய ரக துடுப்பு படகு ஒன்றில் ஆறு அகதிகள் கடலில் தத்தளித்தனர். National Society of Sea Rescue (SNSM) மீட்புப்படையினர் அகதிகளை மீட்டனர். 26 வயதில் இருந்து 51 வயதுவரையான இரானிய குடியுரிமை கொண்ட அகதிகள் இவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 7.15 மணி அளவில் சுவாசப்பிரச்சனை காரணமாக ஆறு அகதிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Boulogne-sur-Mer பகுதி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டில் இதுபோல் படகில் செல்ல முற்பட்டதாக 36 வழக்குகளும், 2017 இல் 13 முயற்சிகளும், 2018 இல் இதுவரை 10 முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

