பெற்றோல் பௌசர் சீல் உடைத்து திருட்டில் ஈடுபட முயற்சி செய்த 2 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது.
திருகோணமலை சீனக்குடா ஐ.ஓ.சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நேற்றுமுன்தினம் மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.
திருகோணமலையில் இருந்து கெக்கிராவைக்கு எடுத்துச் செல்ல இருந்த 6600 லீட்டர் பௌசரிலேயே திருட முயற்சி செய்தமை தொடர்பில் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

