யாழ்ப்பாணத்தில் மாட்டுத் தொழுவமொன்றில் காணப்பட்ட மாட்டுச் சாணம் திடீரென்று பாம்பாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கோட்டைக்காடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிலேயே இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
“காலையில் வன்னிக்குச் செல்வதற்காக வழமையைவிட நேரத்திற்கே எழுந்து மாட்டுக் கொட்டிலை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டேன்.
கங்கு மடையால் சாணத்தை அள்ளி எருக் கிடங்கில் போடுவது வழமை. இவ்வாறு ஒரு சாணக் குவியலை அள்ளியபோது அது திடீர்ரென்று பாம்பாக நெளிவதைக் கண்டு கீழே போட்டுவிட்டேன்.
நல்ல நேரம் அந்த பாம்பு புடையன் இனத்தைச் சேர்ந்தது. கங்கு மட்டையால் எடுத்ததனால் அது தீண்டுவதிலிருந்து தப்பிவிட்டேன்.” என்றார்.
குறித்த பாம்பு சுருண்ட நிலையில் அசைவின்றிப் படுத்ததனாலும் அவசர அவசரமாக வேலை செய்ததனாலும் அதனை சரியாக இனங்காணமுடியாமற்போனதாக அவர் தெரிவித்தார்.

