அமெரிக்க ஜனாதிபதி முன்னெடுத்துள்ள மாட்டுத் தனமான நடவடிக்கையின் காரணமாகவே டொலர் விலை அதிகரித்துள்ளதாகவும், இந்த அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் நாட்டில் வேகமான அபிவிருத்தி இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தனது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தையும் குறிப்பிடத்தக்க அளவு முடிவுக்கு கொண்டுவர முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். யுத்தம் இருந்த போது 06 ஆண்டு காலத்தில் தனி நபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்ததாகவும், நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரித்ததாகவும் அவர் மேலும் குறுப்பிட்டுள்ளார்.
