அநுராதபுரம் – சியம்பலகஸ்வெவ பகுதியில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் இருந்து விவசாய காணிக்கு நேற்று இரவு சென்ற நபர் யானை தாக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த அவர், ரம்பேவ மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வழியில் உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த 78 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

