திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவ பரிசோதனைக்காக நேற்று இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தொடையில் ஏற்பட்ட நீர்க்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு பிறகு இன்று பிற்பகலில் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிற்பகல் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.