‘ஆட்சியை பிடிக்க ராகுல் பகல் கனவு காணக் கூடாது,” என பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா தெரிவித்தார்.
ராஜஸ்தானில், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில், இந்த நாடு பாதுகாப்பாக இல்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், காங்., ஏன் தோல்வி அடைந்தது என்பதை பற்றி அக்கட்சி சிந்திக்க வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க, ராகுல் பகல் கனவு காணக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

