நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாண்பதற்கு உடன் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொள்வதாக கூட்டு எதிர்க் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்வதற்கு சதி செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள இந்திய நாட்டவர் கூறியுள்ளார். இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து வரைவில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த இரு விடயங்கள் தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்தைக் கூட்டி தீர்மானம் எடுக்கும் படியும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பாராளுமன்றம் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

