ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரை கொலை செய்வதற்கான சதி நடவடிக்கை தொடர்பில் உடன் விசாரணை நடாத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாம் அவசரப்பட மாட்டோம். இருப்பினும், இது தொடர்பில் விரைவாக விசாரணை நடாத்தப்பட வேண்டும். கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இருக்கின்றதா? என்பது தொடர்பில் விரைவாக கண்டறிய வேண்டும். அவ்வாறு இருப்பதாக இருந்தால், அது தொடர்பில் விரைவாக சட்ட நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதன் பிறகுதான், நாம் கட்சி என்ற அடிப்படையில் தீர்மானங்களுக்கு வர முடியுமாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

