மட்டக்களப்பு செங்கலடிபிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோப்பாவெளி கிராமத்தை சேர்ந்த 25வயதுடைய இளைஞன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை பால் கறக்க சென்ற போதே யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியாகி உள்ளார்.
குறித்த சடலம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

