முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் இலங்கையிலிருந்து வெளியேறியதன் பின்னர் தனது சட்டத்தரணியின் ஆலோசனையின் படி அவருடன் எந்தவித தொடர்பையும் தான் வைத்திருக்கவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் விடுத்த வினா ஒன்றுக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இதனைக் கூறினார்.
பிரதமர் சிங்கப்புர் சென்றிருந்த போது அர்ஜுன் மஹேந்திரனைச் சந்தித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவர் பிரதமருடைய தனிப்பட்ட நண்பன் என்ற வகையில் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் என்ற பொறுப்பு பிரதமருக்கு இல்லையா? என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

