மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தினால் சில தாக்குதல்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களினால் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நோக்கி சென்ற பேருந்தின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளது.
“கொழும்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
ஆகவே கொழும்பிலுள்ள அமெரிக்கர்கள் அவதானமாக இருக்க வேண்டும். பெரிய கூட்டங்களை தவிர்க்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

