பொது மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு அரசாங்கத்தின் எந்தவித தடையும் கிடையாது எனவும், அதற்கு முரண்பாடான செயற்பாட்டை வெளிப்படுத்தினால் அதே பாஷையில் பதிலளிக்கவும் தாம் தயாராகவே உள்ளோம் எனவும் நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
கூட்டு எதிரணியினருக்குத் தேவையாக இருப்பதெல்லாம், அப்பாவிப் பொது மகன் ஒருவரை அரசாங்கத்தின் நடவடிக்கையினால் உயிரிழக்கச் செய்து கொள்வதாகும். அரசாங்கம் அதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

