சக்தி வழிபாடானது சிந்துவெளிக் காலம் முதல் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாடு என்பது வரலாறு கண்ட உண்மை. சக்தியை கண்ணகி காளி, முத்துமாரி, நாச்சியம்மன், பேச்சியம்மன், சீதையம்மன், திரெளபதியம்மன் என்ற பல பல நாமங்களில் கிராமிய மக்கள் நம்பிக்கை கொண்டு வழிபாடாற்றி வந்துள்ளனர். அந்த வகையில் பாண்டிருப்பு என்னும் கிராமத்தில் திரெளபதை அம்மன் வழிபாடும் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்பிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாண்டியூர் மக்கள் திரெளபதை அம்மனுக்கு வருடா வருடம் 18 நாட்கள் அலங்கார உற்சவம் எடுத்து, விரதம் அனுட்டித்து அன்னையின் அருளைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாண்டும் 04.09.2018 இன்று இவ்வாலய உற்சவம் கொடியேற் றத்துடன் ஆரம்பமாகவுள்ளது .
04/09/2018 செவ்வாய்க்கிழமை – மாலை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம்.
10/09/2018 திங்கட்கிழமை இரவு சுவாமி எழுந்தருளல்.
11/09/2018 செவ்வாய்க்கிழமை காலை நாற்கால் வெட்டுதல்.
15/09/2018 சனிக்கிழமை இரவு கல்யாணக்கால் வெட்டுதலும் ஊர்வலமும்
19/09/2018 புதன்கிழமை மதியம் திரௌபதை சகிதம் பஞ்சபாண்டவர் வனவாசம் பின் அஞ்ஞாதவாசம் செய்தல்.
20/09/2018 வியாழக்கிழமை அருச்சுனர் பாசுபதம் பெறல், அரவாணைக் களப்பலியிடல்
21/09/2018 வெள்ளிக்கிழமை மாலை தீமிதிப்பு வைபவம்.
22/09/2018 சனிக்கிழமை பகல் பாற்பள்ளையம் தருமர் முடிசூட்டு விழா இரவு சுவாமி ஊர்வலம்.
இலங்கையில் உள்ள ஆலயங்களில் 18 அடிகள் கொண்ட நீளமான தீக்குழி இதுவேயாகும்.

