Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீர்வுக்குப் பின் அபிவிருத்தியா? – அப்படியெனில் தேர்தலில் போட்டியிருக்க மாட்டோம் என்கிறார் சுமந்திரன்

September 4, 2018
in News, Politics, World
0

“அரசியல் தீர்வுக்குப் பின்னரே அபிவிருத்தி என்று நாம் நினைத்திருந்தால் தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டோம்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தபோது நடந்த மாகாண சபைத் தேர்தலிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்த பின்னர் நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் நாம் போட்டியிடவில்லை. போர் முடிந்த பின்னர் வடக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் பங்குபற்றினோம்.
அரசு சில நடவடிக்கைகளை வரவு – செலவுத் திட்டத்துக்கு உட்பட்டு முன்னெடுக்கின்றது. அவற்றின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டிலும், 2019ஆம் ஆண்டிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பெறுத்தவரையில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 5 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அரசு எமது முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.

வடக்கு, கிழக்கு செயலணியில் நாம் பங்கு கொள்கின்றோம். அதன் ஊடாக அவசரமான, அத்தியாவசியமான விடயங்களான நில ஆக்கிரமிப்பு, நில விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, கைதிகள் விடுவிப்பு என்பன பற்றிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும்” – என்றார்.

Previous Post

ஆடைகளின்றி மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் அச்சத்தில் வாழும் வவுனியா மக்கள்..!!

Next Post

08 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post

08 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures