திருகோணமலை மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் திருகோணமலை கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும், கடும் வெயில் காரணமாக குருணாகல், கொழும்பு மற்றும் சிலாபம் போன்ற பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் நிலாவெளி, கோணேஸ்வரார் கோவில் மற்றும் திருகோணமலை கடற்கரைகளில் நீராடி மகிழ்வதை காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, திருகோணமலையின் பல பகுதிகளுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இவ்வாறான சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் மேலும் பல சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க முடியும்.

