சோமாலியாவின் மொகடிசு நகரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் பாடசாலையொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல் என்பதனால், அதிக உயிரிழப்பு இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சம்பவத்தில் ஆறு மாணவர்களும், மூன்று சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், சம்பவத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் பற்றி மொத்த விபரம் இதுவரையில் அந்நாட்டு அதிகாரிகளினால் மதிப்பிடப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

