கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை 04 ஆம் திகதி மாலை கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டம் அன்றைய தினம் 5.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டு எதிர்க் கட்சியின் அரசாங்கத்துக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

