Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேறு கட்சிக்கு மாறிய தாய் – துப்பாக்கியால் சுட்டு 3 வயது குழந்தைக்கு தண்டனை

September 1, 2018
in News, Politics, World
0

வேறு கட்சிக்கு மாறிய பெண்ணின் 3 வயது குழந்தையை பாஜகவினர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்தேறியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனது.

மேற்கு வங்கம் மாநிலம், மால்டா மாவட்டத்தை சேர்ந்த புதுல் மந்தால் என்ற பெண் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராய் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் அங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் புதுல் மந்தாள் பாஜக சார்பில் நின்று வெற்றியும் பெற்றுள்ளார். அதன்பின்னர், அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகியான அணில் மந்தல் கட்சி மாறியதன் காரணமாக புதுல் மந்தாளை மிரட்டி வந்துள்ளார். நேற்று சில குண்டர்களை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்து அந்த பெண்ணின் வீட்டை சூறையாடி உள்ளனர். இதையடுத்து புதுல் மந்தள் தனது கணவருடன் தப்பித்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரின் 3வயது குழந்தையை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கொல்கத்தால் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

பிறக்கட்சிக்கு மாறியதால் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்

Next Post

புத்தளம் அம்மன் கோவிலில் திருட்டு

Next Post

புத்தளம் அம்மன் கோவிலில் திருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures