Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்

September 1, 2018
in News, Politics, World
0
ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்

மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்று மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார்.
“என்னை திமுகவில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்து வருகிறார் மு.க.அழகிரி. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த இருக்கிறார். இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என மு.க.அழகிரி தெரிவித்து வந்தார்.

மேலும் கடந்த பல நாட்களாக, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “திமுகவை காப்பாற்றவே எங்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். என்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார். கட்சியில் இணைய நான் தயாராக இருந்தாலும், அவர்கள் தயாராக இல்லை. 1200 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே திமுக இல்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கின்றனர். எனது மகன் தயாநிதிக்கு திமுகவில் எந்த பொறுப்பையும் கேட்கவில்லை” என்று அழகிரி தெரிவித்தார்.

Previous Post

கிளிநொச்சி நித்தியகலா கொலை குற்றவாளி கைது

Next Post

வேறு கட்சிக்கு மாறிய தாய் – துப்பாக்கியால் சுட்டு 3 வயது குழந்தைக்கு தண்டனை

Next Post

வேறு கட்சிக்கு மாறிய தாய் – துப்பாக்கியால் சுட்டு 3 வயது குழந்தைக்கு தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures