புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ள வாகன போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்கான தண்டப்பணத்தை எதிர்வரும் 14 நாட்களுக்குள் பழைய முறைமைக்கு கொண்டு வரவில்லையாயின் நாடு தழுவிய தனியார் பஸ் சேவை பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை பஸ் நிறுவனங்கள் சம்மேளனம் இன்று தீர்மானம் எடுத்துள்ளது.
இதனை நடைமுறைப்படுத்தாது போனால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் தினம் குறித்து அடுத்து வரும் நாட்களில் அறியத்தரவுள்ளதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்கான தண்டப் பணத்தை அதிகரித்தமை அநீதியானது எனவும், அதிகரித்த கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்குமாறும் சம்மேளனம் கோரியுள்ளது.

