சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் பத்திரிகையாளர் உபேந்திரா ராயின் ரூ.26.65 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன. விலையுயர்ந்த கார்கள், வீடுகள் மற்றும் முதலீடுகள் இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளது.
சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் கடந்த ஜூன் 8ம் தேதி உபேந்திரா ராயை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. முன்னதாக இதே வழக்கில் கடந்த மே மாதம் 3ம் தேதி சிபிஐ, உபேந்திராவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

