Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நானுஓயா டெஸ்போட் பகுதியில் தீ: கடை முற்றாக எரிந்து சாம்பல்

August 29, 2018
in News, Politics, World
0

நானுஓயா டெஸ்போட் பகுதியில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து 29.08.2018 அன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நானுஓயா பொலிஸார், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடையில் சமையல் எரிவாயு (கேஸ் சிலின்டர்) இருந்ததனால் இத்தீ பரவலாக பரவியுள்ளதோடு, தீ விபத்தினால் அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்…!!

Next Post

பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் இராணுவ அதிகாரிகளின் கணக்குகள்

Next Post

பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் இராணுவ அதிகாரிகளின் கணக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures