ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு, கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவால் வீசப்பட்ட இந்த வெடிகுண்டு, லூட்விக்ஸ்காபென் நகரில் கட்டுமான பணியின் போது கிடைத்தது. 1000 மீட்டர் சுற்றுவட்டார பகுதியில் வசித்த சுமார் 18,500 பேரை வெளியேற்றிய அதிகாரிகள், வெடிகுண்டை பத்திரமாக செயல் இழக்கச் செய்தனர்.

