வியட்நாம் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் கலந்துகொண்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷின் செயற்றிட்ட அமைச்சர் முஸ்தபா கமாலுக்கும் இடையிலும் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
வியட்நாமில் இடம்பெறும் இந்து சமுத்திர மாநாட்டுக்கு முன்பதாக இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

