பெரிய வெங்காய செய்கையிலிருந்து விவசாயிகள் விலகும் நிலை உருவாகியுள்ளது.
பெரிய வெங்காயத்திற்கான நிர்ணய விலை இதுவரை கிடைக்காததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
வரட்சி மற்றும் மழையுடனான வானிலை, பெரிய வெங்காய இறக்குமதி, செய்கைக்கான செலவு ஆகிய காரணிகளால் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த போகத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை போகத்தில் செய்கையிடப்பட்ட பெரிய வெங்காயத்தின் தொகை, இரு மடங்காக குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
