இந்திய ராணுவத்துக்கு ரூ.46,000 கோடிக்கு ஆயுதம், ஹெலிகாப்ட்டர் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையின் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. கடற்படைக்கு 111 ஹெலிகாப்ட்டர்கள் வாங்குவதற்கு ரூ.21,000 கோடி செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ராணுவத்துக்கு தேவையான பீரங்கிகள் ரூ.3,364 கோடியில் வாங்கப்படும்.

