Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாண எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அதிக பாதிப்பு

August 25, 2018
in News, Politics, World
0

சகல இனங்களுக்கும் நீதியான முறையில் எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் முஸ்லிம்களும், மலையக மக்களும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.

புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் விசனம் தெரிவித்தார்.

மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று(24) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை மேலும் இழுத்தடிக்காது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதாயின் ஆகக் குறைந்தது பழையமுறைக்காவது செல்லவேண்டியிருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

எல்லை நிர்ணய அறிக்கையால் சிறுபான்மையினருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயத்தை மேற்கொண்ட குழுவின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறைபாடுகள் உள்ளன.

எல்லை நிர்ணய குழுவினர் பல் உறுப்பினர் தொகுதிகளை அமைப்பதற்கு விரும்பவில்லை. அவர்கள் புள்ளிவிபரங்கள் என்ற ஆடையை அணிந்துகொண்டு எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளனர். ஒரு இலட்சம் வாக்காளர்கள் இருந்தால் அங்கு ஒரு தொகுதியை ஏற்படுத்த முடியும் என்பதே அவர்களின் எடுகோள். பல் உறுப்பினர் தொகுதியை ஏற்படுத்துவதாயின் 2 இலட்சம் பேர் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை கவனத்தில் கொண்டு பல் உறுப்பினர் தொகுதிகளை உருவாக்க அவர்கள் விரும்பவில்லை.

உதாரணமாக கண்டி, அநுராதபுரம், குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றனர். அந்தப் பகுதிகளில் பல் உறுப்பினர் தொகுதிகளையோ அல்லது அவர்களுக்கான தனியான தொகுதிகளையோ அவர்கள் உருவாக்க விரும்பவில்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Previous Post

எல்லைநிர்ணய அறிக்கையை சபையில் முன்வைத்த அமைச்சரே அதற்கு வாக்களிக்க வில்லை

Next Post

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாம் விஜயம்

Next Post

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாம் விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures