Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்ணை நிர்வாணப்படுத்தி சாலையில் அடித்து இழுத்துச் சென்ற கும்பல்

August 21, 2018
in News, Politics, World
0

பிஹாரில் போஜ்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரைக் கொன்றுவிட்டார் எனச் சந்தேகப்பட்டு, இளம்பெண் ஒருவரைச் சாலையில் நிர்வாணமாக்கி ஒரு கும்பல் அடித்து இழுத்துச் சென்ற கொடுமை நடந்துள்ளது.

போஜ்பூர் மாவட்டம், அரா நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது பிஹியா நகரம். இங்குள்ள ரயில்வே இருப்புப் பாதையில், 19 வயதான பிம்லேஷ் சாவ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டு சடலமாக நேற்று கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து அறிந்த அந்த இளைஞரின் சொந்த கிராமமான தாமோதர்பூர் கிராமத்தினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் சம்பவம் நடந்த பிஹியா நகருக்கு வந்தனர். பிம்லேஷ் உடலைப் பார்த்தபோது, அவரின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதைப் பார்த்து அந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.

பிம்லேஷ் மர்ம சாவுக்கும், ரயில்வே இருப்புப்பாதையை ஒட்டி இருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகக் கிராம மக்கள் சந்தேகப்பட்டனர். இதையடுத்து, சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள 19 வயது இளம்பெண்ணை அந்தக் கிராம மக்கள் இழுத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அந்தக் கும்பலில் இருந்த சிலர் அந்தப் பெண்ணை திடீரெனத் தாக்கத் தொடங்கி, அந்தப்பெண்ணின் உடலில் இருந்த ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை சாலையில் நிர்வாணமாக அடித்து இழுத்து வந்து அசிங்கப்படுத்தினார்கள்.

இந்தத் தகவல் அப்பகுதியில் உள்ள போலீஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டபின், அவர்கள் வந்து கூட்டத்தினரைக் கலைக்க முயன்றனர், ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

அந்தக் கும்பலிடம் இருந்து இளம்பெண்ணை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக 15-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போஜ்பூர் போலீஸ் எஸ்பி அவாஷ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ”இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்து வந்தது தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உள்ளூர் தலைவர் உள்பட 15 பேரைக் கைது செய்துள்ளோம். பிஹியா போலீஸ் நிலையத்தின் விசாரணை அதிகாரி பொறுப்பின்மையோடு செயல்பட்டதால், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ”சட்டம் ஒழுங்கு இல்லாத பிஹார் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, அடித்து வன்முறை கும்பலால் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

ஒரு பெண்ணை கொடூரமாக நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்வதைப் பார்க்கும்போது என்னால் பதில் பேச முடியவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று முதல்வர் நிதிஷ் குமாரை கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Previous Post

கேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்?

Next Post

நாடகப்பெருவிழா

Next Post

நாடகப்பெருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures