இளைஞன் ஒருவன் நிறைந்த மதுபோதையில் மகிழுந்தை செலுத்தி, ஆறு பேரை இடித்துத்தள்ளியுள்ளான். குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு Cambrai (Nord) நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய இளைஞன் தரிப்பிடத்தில் நிறுத்தி வைத்திருந்த மகிழுந்தை எடுத்துக்கொண்டு நிறைந்த மது போதையில் வெளியேறியுள்ளான். பின்னர் வீதியில் நின்றிருந்தவர்களை மோதி தள்ளிக்கொண்டு சென்றுள்ளான். இதில் இரண்டு நபர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு கால் முறிந்தும், மற்றொரு நபர் கோமா நிலைக்கும் உள்ளாகியுள்ளனர். மற்றைய நால்வரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சிறிது நேரத்துக்குள்ளாக குறித்த நபர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதுடைய குறித்த இளைஞன் முன்னர் ஒருதடவையும் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாகன சாரதி அனுமதி பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டபோது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. –

