தலைமறைவாக இருந்து வரும் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் இருப்பதை பிரிட்டன் அரசு அதிகாரிகள் முதன் முறையாக உறுதி செய்துள்ளனர். இதையடுத்து நீரவ் மோடியை இந்தியா கொண்டுவர சிபிஐ அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக 13 ஆயிரம் கோடி வரை கடனாக பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவான நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரும் மனு வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் பிரிட்டன் அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நீரவ் மோடி லண்டனில் இருப்பதை உறுதி செய்து பிரிட்டன் அதிகாரிகள் முதன் முறையாக இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐக்கு பிரிட்டன் அதிகாரிகள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நீரவ் மோடியை முறைப்படி இந்தியா கொண்டுவந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

